செட்டிநாடு-கோழி-சாப்ஸ்

தேவையான பொருட்கள்:

  • எலும்பில்லாத கோழிக்கறி – அரை கிலோ
  • மிளகு – 2 ஸ்பூன்
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • பூண்டு – 5 பல்
  • இஞ்சி – சிறு துண்டு
  • பட்டை – 1 துண்டு
  • தேங்காய் – 1 துண்டு
  • முட்டை – 2
  • சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – பொறிக்கத்தக்க அளவு

செய்முறை:

  • மிளகு முதல் தேங்காய் வரை உள்ள பொருட்களை அரைக்கவும். கோழிக்கறியை அரைத்த மசாலாவுடன் உப்பு போட்டு வேகவிட்டு மசாலா சேர்த்து வெந்து தண்ணீர் வற்றி வரும் பொழுது எடுத்து ஆற வைக்க வேண்டும்.
  • முட்டையை அடித்து, சோள மாவு கரைத்து முட்டையுடன் சேர்த்து கலந்து வைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டைக் கலவையில் கோழித்துண்டுகள் நனைத்து பொரித்தெடுக்கவும்.
  • சோள மாவு நேரடியாக முட்டையில் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் கரையாது கட்டி தட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *