தேவையான பொருட்கள்:
- முட்டை – 3
- சின்ன வெங்காயம் – 10 – 15
- பச்சை மிளகாய் – 1
- மிளகுத் தூள் – அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- நெய் – அரை ஸ்பூன்
- கருவேப்பிலை – சிறிது
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- முட்டை நன்கு நுரை வரும் வரை அடித்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை பொடியாக வெட்டி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி வெட்டி வைத்துள்ள வெங்காயம், மிளகாய் இவற்றைப் போட்டு வதக்கி அதை அடித்து வைத்துள்ள முட்டையுடன் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் கலந்து முட்டைக் கலவை தயாரித்து ஊற்றி நன்கு கிளறினால் முட்டை பொடிமாஸ் ரெடி.