Attur is my native place, In my place mutton curry is very spicy and delicious.
I like to share this recipe with you all.
Ingrediends:
- மட்டன்(mutton) – அரை கிலோ
- வெங்காயம்(onion) – 2
- தக்காளி(tomato) – 2
- மஞ்சள் தூள்(Turmaric Powder) – 1/2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்(small Onion )– 100g
- இஞ்சி பூண்டு விழுது(ginger garlic paste) – 1/2 tsb
- எண்ணெய்(oil) – தேவையான அளவு
- உப்பு(salt)– தேவையான அளவு
- மசாலாவுக்கு(Masala):
- மிளகு(pepper) – 1 ஸ்பூன்
- சீரகம்(cumin seeds) – 1 ஸ்பூன்
- சோம்பு(fennel seeds) – 1/2 ஸ்பூன்
- வரமிளகாய்(Red Chilli) – 4
- மல்லித்தூள்(அ)முழு மல்லி(coriander powder) – 1 ஸ்பூன்
- பட்டை(Cinnamon stick) – 1
- கிராம்பு – 2
- முந்திரி (cashew)– ஐந்து
- ஏலக்காய்(Cardamom) – 3
- தேங்காய்(coconut ) – பாதி (ஒரு மூடியில்)
- இஞ்சி(Ginger) – நெல்லிக்காய் அளவு
- பூண்டு(Garlic) – 5-6 பல்
Method:
- முதலில் மசாலாவுக்கு உரிய மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், மல்லித்தூள்(அ)முழு மல்லி, பட்டை, கிராம்பு, முந்திரி, ஏலக்காய், தேங்காய், இஞ்சி, பூண்டு என அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கெள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மட்டன், மஞ்சள் தூள், உப்பு ,வெங்காயம், மற்றும் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து வைத்துக் கெள்ளவும்.
- அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கெள்ளவும்.
- கலந்து வைத்த மட்டன் கலவையை 10-15 நிமிடம் ஊறவைக்கவும்
- ஒரு கனமான வாணலியில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது இரண்டையும் நன்கு வதக்கி அதனுடன் ஊற வைத்த மட்டன் கலவையையும் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.
- தண்ணி தேவைபட்டால் சிறிது ஊற்றி நன்கு வேகவிட்டு புதினா கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.