தேவையான பொருட்கள்:
- மோர் – அரை லிட்டர்
- பச்சை மிளகாய் – 4
- சீரகம் – கால் ஸ்பூன்
- துவரம் பருப்பு – அரைஸ்பூன்
- கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
- தேங்காய் துருவல் – ஒரு கை பிடி
- மல்லி,கருவேப்பிலை- சிறிது
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- கடுகு- 1 டீஸ்பூன்
- மிளகாய் வற்றல் – 2
- உப்பு – தேவைக்கு
செய்முறை:
- பருப்பு வகையை சிறிது நேரம் ஊறவைக்கவும்.ஊறிய பின்பு அத்துடன்,மிளகாய்,சீரகம்,தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- அரைத்தவற்றை மோர்,உப்புடன் கலந்து கொதிக்க வைக்கவும்.அடுப்பை சிம்மீள் வைத்து அடிக்கடி கிளரி விடவும்.அடுப்பில் கொதித்து கொண்டு இருக்கும் போது கருவேப்பிலை சேர்க்கவும்.
- பின்பு கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,மிளகாய் வற்றல் தாளித்து கொட்டவும்,மல்லி இலை சேர்க்கவும்.
- சுவையான மோர் குழம்பு ரெடி.