தேவையான பொருட்கள்:
- கேரட் – 4
- பால் – 1 கப்
- சர்க்கரை – 1/4 கப்
- மஞ்சள் பொடி அல்லது ஃபுட் கலர்- 1/2 சிட்டிகை
- பிஸ்தா பருப்பு – 8
- வெனிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
- கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
- இந்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி (அடிப்பிடிக்காமல்) நன்கு சூடுவந்ததும் அதில் பாலையும் சேர்த்து கலக்கவும்.
- ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஸரில் வைக்கவும்.
- அரைமணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி அதில் ஒன்றிரண்டாகப் பொடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கிரீம் ஆனதும் எடுத்து பரிமாறலாம்.
- குழந்தைகளைக் குஷிப்படுத்தும் இந்த ஐஸ்கிரீம்.