தேவையான பொருட்கள்:
- கொண்டைக்கடலை – நூறு கிராம்
- சி.வெங்காயம் – இருபது
- தக்காளி – மூன்று
- மல்லிப் பொடி – ஒரு டீ ஸ்பூன்
- மிளகாய் பொடி – ஒரு டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி – இரண்டு சிட்டிகை
- புளி – ஒரு பெரிய நெல்லிக்காயளவு
- தேங்காய் – இரண்டு டீ ஸ்பூன்
- சோம்பு – ஒன்றரை ஸ்பூன்
- கடுகு + உளுந்து – ஒன்றரை ஸ்பூன்
- கறிவேப்பிலை – இரண்டு கொத்து
- உப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன்

செய்முறை:
- முதல் நாள் இரவே கொண்டைக்கடலையை ஊற வைக்க வேண்டும்.
- முதலில் கொண்டைகடலையை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
- புளியை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
- சி. வெங்காயம் பதினெட்டையும், தக்காளியையும் வெட்டி வைக்கவும்.
- தேங்காயையும் அரை ஸ்பூன் சோம்பையும் அரைக்க வேண்டும்.
- கொண்டைக்கடலை முக்கால் பதம் வெந்ததும் வெட்டி வைத்த வெங்காயம், தக்காளியை அதில் போடவும்.
- மல்லி பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு போடவும். புளியை கரைத்து ஊற்றவும்.
- எல்லாம் சேர்ந்து கொதித்ததும் அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு குழம்பை இறக்கி விடவும்.
- ஒரு சிறிய வாணலியை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து, சோம்பு போட்டு வெடித்ததும் சிறிய வெங்காயம் இரண்டை தட்டி போடவும்.
- வாசனை வந்ததும் கறிவேப்பிலை போட்டு குழம்பில் கொட்டி இறுக மூடி வைக்கவும்.
SUPPER !!!
SUPER AND EASY RECEIPE