தேவையான பொருட்கள்:
- சீரக சம்பா அரிசி – 3 கப்,
- மட்டன் – 1/2 கி,
- இஞ்சி – 50 கிராம்,
- பூண்டு – 25 பல்,
- பெரிய வெங்காயம் – 4,
- சின்ன வெங்காயம் – 15,
- தக்காளி – 3
- பச்சை மிளகாய் – 4,
- கிராம்பு – 4,
- பட்டை – 4 துண்டு,
- ஜாதிக்காய் – பாதி,
- ஏலக்காய் – 4,
- மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்,
- கரம்மசாலா – 1/4 டீஸ்பூன்,
- தேங்காய் – 1 மூடி,
- முந்திரி – 10,
- தயிர் – 1/2 கப்,
- எலுமிச்சம்பழம் – 1 மூடி,
- புதினா – 1 கட்டு,
- மல்லி – 1 கட்டு,
- நெய் – 1/2 கப்,
- எண்ணெய் – 1/2 கப்.
- கிராம்பு – 3,
- பட்டை – 3 சிறிய துண்டு,
- ஏலக்காய் – 3,
- பிரிஞ்சி இலை – 1,
- சோம்பு – 1 டீஸ்பூன்.
தாளிக்க
செய்முறை:
- மட்டனில் 1/4 கப் தயிர், மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன், கரம்மசாலா, உப்பு 1டீஸ்பூன் போட்டு 5 விசில் விட்டு வேகவைக்கவும்.
- பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை நெய் விட்டு வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
- பெரியவெங்காயம், சின்னவெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
- பச்சமிளகாயை வாயை கீறிக்கொள்ளவும்.
- பூண்டை தனியாக அரைத்துக்கொள்ளவும்.
- துருவிய தேங்காய், இஞ்சி, முந்திரி இவை மூன்றையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும். ( இந்த பிரியாணியின் விசேஷமே தேங்காயும், இஞ்சியும் சேர்த்து அரைத்து பால் எடுப்பதுதான். இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் முந்திரி சேர்ப்பது ரிச்னஸ் க்காகத்தான். )
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய விடவும்.
- காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, தாளிக்கவும்.
- நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்.
- வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அரைத்த பூண்டு விழுதை போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கியதும், அரைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் விழுது, மிளகாய்தூள் போட்டு வதக்கவும்.
- 5 நிமிடம் போல வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியை போடவும்.
- தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர்
- சேர்க்கவும்.
- இப்போது எடுத்து வைத்திருக்கும் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும்.
- உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.
- ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும்.
- பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சம்பழம் பிழியவும்.
- பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்