Chettinad Pakkoda

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு — 1/2 கிலோ
  • பச்சரிசி மாவு — 100 கிராம்
  • பச்சைமிளகாய் — 50 கிராம்
  • கறிவேப்பிலை — 3 இனுக்கு
  • கொத்தமல்லி தழை — 1/2 கட்டு (பொடியாக நறுக்கியது)
  • சிறிய வெங்காயம் — 200 கிராம்(நீளமாக நறுக்கிக் கொள்ளவும்)
  • உப்பு – தே.அ
  • சீரகம் — 1 ஸ்பூன்
  • சோம்பு — 1 ஸ்பூன்
  • இட்லி சோடா — 4 சிட்டிகை

செய்முறை:

  • ஒரு பெரிய கடாயில் கடலை மாவு,பச்சரிசி மாவையும் கலந்து கொள்ளவும்.
  • இதனுடன் மேலே சொன்ன பொருட்கள் எல்லாவற்றையும் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
  • வாணலியில் 1/2 லிட்டர் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் மாவை எடுத்து உதிர்த்து விடவும்.
  • சிவக்க வெந்ததும் எடுத்து பறிமாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *