தேவையான பொருட்கள்:
- சிக்கன் – ஒரு கிலோ
- வெங்காயம் – இரண்டு பெரியது
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு மேசை கரண்டி
- தக்காளி – இரண்டு பெரியது
- மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
- தனியாதூள் – இரண்டு மேசை கரண்டி
- எண்ணை – நூரு மில்லி
- பட்டை – இரண்டு அங்குலம் இரண்டு
- ஏலக்காய் – நாலு
- மிளகு – ஒரு தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிது
- மிளகு – ஒரு தேக்கரண்டி (பொடித்தது)
- எலுமிச்சை – இரண்டு
- கருவேப்பிலை – சிறிது
- கொத்துமல்லி – சிறிது
- பட்டர் – ஒரு மேசை கரண்டி
தாளிக்க
கடைசியில் தூவ
செய்முறை:
- சிக்கனை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக போட்டு தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
- ஒரு பெரிய வாயகன்ற சட்டியை காய வைத்து பட்டை ,ஏலக்காய்,மிளகு, கருவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
- பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல வதக்கி கலர் மாறியதும் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தனியாதூள் , போட்டு வதக்கி சிக்கனை போடு அதிக தீயில் கிளறவேண்டும்.
- பிறகு தக்காளியை பொடியாக நருக்கி போட்டு உப்பும் சேர்த்து நல்ல கிளறி தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் தக்காளியை வதங்க விட வேண்டும்.
- பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் வேக விட வேண்டும்.
- கடைசியில் பட்டர், பொடித்த மிளகு, கருவேப்பிலை, எலுமிச்சை சாறு ஊற்றி கொத்து மல்லி தழை தூவி இரக்க வேண்டும்.