தேவையான பொருட்கள்:
- கோழி எலும்பு – கால் கிலோ
- பெரிய வெங்காயம் – 1
- நாட்டுத் தக்காளி – 3
- மிளகு, சீரகம் – தலா 1 ஸ்பூன்
- பூண்டு – 5 பல்
- கொத்தமல்லி – சிறிது
- கருவேப்பிலை – சிறிது
- சோம்பு – கால் ஸ்பூன்
- பட்டை – 1
- மஞ்சள் தூள் – சிறிது
- எலுமிச்சம்பழம் – 1
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- மிளகு, சீரகம், பூண்டு இவற்றை நுணுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து, வெங்காயம், தக்காளி வதக்கி, கோழி எலும்பு, மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கி அதனுடன் நுணுக்கி வைத்துள்ளவற்றைப் போட்டு கிளறி வெந்நீர் ஊற்றி உப்பு போட்டு குக்கரை மூடி 5 விசில் வந்தவுடன் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து கருவேப்பிலை, கொத்தமல்லித் தூவி பரிமாறவும்.
- மசாலா வாசனை வேண்டுமென்றால் பட்டை, மிளகு, சீரகம், சோம்பு, தனியா, மிளகாய் – 1 எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்யவும். பூண்டு – 4 பல் இடித்து வைக்கவும்.
- குக்கரில் வெங்காயம், தக்காளி வதக்கி, கோழி எலும்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிட்டு, குக்கரைத் திறந்து அடுப்பில் வைத்து பொடித்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு ஒரு கொதி வந்தபிறகு, கொத்தமல்லிதூள், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி பரிமாறவும்.