தேவையான பொருட்கள்:
- அவித்த சிக்கன் பீஸ் – 200 கிராம் (நீளமாக வெட்டவும்)
- முட்டைக்கோஸ் – 50 கிராம் (நீளமாக வெட்டவும்)
- கேரட் – 1 (நீளமாக வெட்டவும்)
- குடமிளகாய் – 1 (நீளமாக வெட்டவும்)
- வெங்காயம் – 1
- சோயா சாஸ் – கால் டீஸ்பூன்
- சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
- அஜினாமோட்டோ – கால் டீஸ்பூன்
- மைதா – 1 கப்
- முட்டை – 4
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் வதக்கி சிக்கன், காய்களைப் போட்டு வதக்கி சாஸ் வகைகளைப் போட்டு பிறகு உப்பு அஜினாமோட்டோ போட்டு வதக்கி இறக்கவும்.
- கலர் மாறாமல் சுருள வதக்கவும். முட்டை, உப்பு, மைதா போட்டு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
- பிறகு சப்பாத்தி போல் இட்டு ஒரு ஓரத்தில் சிக்கன் கலவையை வைத்து சுருட்டவும். ஒரு சுருட்டு சுருட்டிய பிறகு இரண்டு ஓரங்களையும் நடுவில் மடித்து பிறகு சுருட்டவும்.
- கடைசியில் தண்ணீர் கொண்டு ஒட்டவும். இப்படி எல்லாவற்றையும் செய்து பிரிஜ்ஜில் வைத்து தேவையான போது சூடான எண்ணெயில் பொரித்து சாஸ் உடன் பரிமாறவும்.