நண்டு குழம்பு

தேவையான பொருட்கள்:

  • நண்டு – 1 கிலோ
  • வெங்காயம் – 3 (பொடியாக வெட்டவும்)
  • நாட்டுத் தக்காளி – 4 (பொடியாக வெட்டவும்)
  • மிளகு – 1 டீஸ்பூன் (அரைக்கவும்)
  • சீரகம் – 2 டீஸ்பூன் (அரைக்கவும்)
  • சோம்பு – 2 டீஸ்பூன் (அரைக்கவும்)
  • பூண்டு – 5 பல்
  • புளி – 1 எலுமிச்சம்பழம் அளவு
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி அரைத்த மசாலாவை வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு நன்றாக வதக்கி புளியை கரைத்து ஊற்றி, தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்றாக கொதித்த பிறகு நண்டை போட்டு மூடிவிடவும்.
  • நண்டு நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கி மூடி வைக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *