நண்டு குருமா

தேவையான பொருட்கள்:

  • நண்டு – ஒன்றரை கிலோ (ஓடு உடைத்து சுத்தம் செய்தது)
  • வெங்காயம் – 2 (நீளமாக வெட்டவும்)
  • நாட்டுத் தக்காளி – 3 (நீளமாக வெட்டவும்)
  • தேங்காய் – 1 (அரைக்கவும்)
  • பச்சை மிளகாய் – 15 (அரைக்கவும்)
  • பூண்டு – 8 பல் (அரைக்கவும்)
  • இஞ்சி – 1 துண்டு (அரைக்கவும்)
  • பட்டை – 2 (அரைக்கவும்)
  • லவங்கம் – 2 (அரைக்கவும்)
  • ஏலக்காய் – 3 (அரைக்கவும்)
  • சோம்பு – 1 டீஸ்பூன் (அரைக்கவும்)
  • கொத்தமல்லி – 1 கைப்பிடி
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி, அரைத்த மசாலாவை மஞ்சள் தூள் போட்டு வதக்கி, நண்டை போட்டு நன்றாக வதக்கி, அரைத்த தேங்காயை கரைத்து ஊற்றி உப்பு போட்டு நன்றாக வெந்து சுண்டி வந்த பிறகு இறக்கி வைக்கவும்.
  • கொத்தமல்லி தூவி மூடி வைக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *