தேவையான பொருட்கள்:
- ஊறவைத்து வேகவைத்த சன்னா -1கப்
- வெங்காயம் -1
- தக்காளி -1
- இஞ்சி பூண்டுவிழுது -1ஸ்பூன்
- சன்னா மசாலா -2ஸ்பூன்
- மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லிதழை -சிறிது
- எண்ணை -2ஸ்பூன்
- பட்டை,கிராம்பு,ஏலக்காய் -1
செய்முறை:
- வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கவும்.
- கொத்தமல்லிதழை பொடியாக நறுக்கிவைக்கவும்.
- வாணலியில் எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
- இஞ்சி பூண்டு போட்டுவதக்கி தக்காளி போடவும்.
- தக்காளி நன்கு வதங்கியவுடன் சன்னாமசாலா,மஞ்சள்தூள் சேர்த்து கொத்தமல்லிதழை போட்டு வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
- கொதிக்க ஆரம்பித்தவுடன் வேகவைத்த சன்னாவை போட்டு தேவையான உப்பு போட்டு சிறிது தண்ணிர் தெளித்து மூடிவைக்கவும்.மசாலா கெட்டியானவுடன் இறக்கவும்.
- சுவையான சன்னாமசாலா ரெடி.சப்பாத்தியுடன் நன்றாக இருக்கும்.