தேவையான பொருட்கள்:
- சுரைக்காய் -1கப்(நறுக்கியது)
- நெத்திலிக்கருவாடு -20
- புளிகரைசல் -1/4கப்
- உப்பு -தேவையான அளவு
- மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
- சின்னவெங்காயம் -10
- தனியா -1/2ஸ்பூன்
- காய்ந்தமிளகாய் -2
- பூண்டு -2பல்
- சீரகம் -1/4ஸ்பூன்
- தேங்காய்துறுவல் -1/4கப்
- தக்காளி -1
- எண்ணை -1ஸ்பூன்
- எண்ணை -1ஸ்பூன்
- கடுகு -1/4ஸ்பூன்
- கறிவேப்பிலை -சிறிது
- வெந்தயம் -1/4ஸ்பூன்
வறுத்து அரைக்க:
தாளிக்க:
செய்முறை:
- கருவாட்டை சுடுதண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து நன்கு அலசிவைக்கவும்.
- வறுத்து அரைக்க குடுத்தவற்றை எண்ணையில் வறுத்து நன்கு அரைத்துவைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு,வெந்தயம் போட்டு பொரிந்தவுடன் கறிவேப்பிலை போட்டு சுரைக்காய் போடவும்.
- காய் நன்கு வதங்கியவுடன் அரைத்தவிழுது,புளிக்கரைசல் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி மஞ்சள்பொடி,உப்பு போட்டு மூடிவைத்து வேகவிடவும்.
- காய் வெந்தவுடன் கருவாடு போட்டு 5நிமிடம் கொதித்து குழம்பு சற்று கெட்டியானவுடன் இறக்கவும்.