Potato Karakuzhambhu

தேவையான பொருட்கள்:

  • உருளைகிழங்கு – 1/4 கிலோ
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • கருவேப்பில்லை – 4 இலை
  • பச்சை மிளகாய் – 2
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
  • மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
  • தனியா தூள் – 1/2 தே.கரண்டி
  • புளி – சிறிய எலுமிச்சை அளவு
  • உப்பு – 2 தே.கரண்டி
  • தாளிக்க:

  • கடுகு – 1/2 தே.கரண்டி
  • வெந்தயம் – 1/2 தே.கரண்டி
  • எண்ணெய் – 1 தே.கரண்டி
  • சோம்பு – 1/2 தே.கரண்டி
  • அரைக்க வேண்டியவை :

  • தேங்காய் – 1/4 முடி
  • பூண்டு – 3 பல்

செய்முறை:

  • முதலில் உருளைகிழங்கினை தோல் நீக்கி பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  • வெங்காயம் மற்றும் தக்காளியினை அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும்.
  • புளியினை 3 கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
  • பிறகு புளி தண்ணீருடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து கரைக்கவும்.
  • முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெந்தாயம் அதன் பின் சோம்பு போடவும்.
  • பிறகு வெங்காயம், கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  • பின் தக்காளி மற்றும் உருளைகிழங்கினை சேர்த்து நன்றாக கிளறி 3 நிமிடம் வதக்கவும்.
  • பின்னர் இத்துடன் புளி கரைசல் மற்றும் பச்சை மிளகாயினை சேர்த்து நன்றாக வேகவிடவும்.
  • இப்பொழுது தேங்காய் மற்றும் பூண்டுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக மைய அரைத்து கொள்ளவும்.
  • உருளைகிழங்கு நன்றாக வெந்தபிறகு இந்த அரைத்த தேங்காயினை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
  • கடைசியில் கொத்தமல்லி தூவவும்.
  • இப்பொழுது சுவையான உருளைகிழங்கு காரகுழம்பு ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *