தேவையான பொருட்கள்:
- மைதா மாவு – 1 கப்
- டால்டா – 1/4 கப்
- வேர்கடலை – 1/2 கப்
- வெல்லம் – 1/2 (அ) 3/4 கப்
- உப்பு – 1 சிட்டிகை
செய்முறை:
- டால்டா, உப்பு சேர்த்து மாவை நன்று மிருதுவாக பிசையவும்.
- வேர்கடலை வறுத்து தோல் நீக்கவும்.
- வேர்கடலை, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
- பிஸைந்த மாவை சின்ன சின்ன உருண்டையாக எடுத்து மெல்லிய சப்பாத்தி போல் தேய்க்கவும்.
- இதன் நடுவில் வேர்கடலை வெல்ல பூரணத்தை வைத்து மடிக்கவும்.
- ஓரத்தை விரலால் அழுத்து மூடி விடவும் (இல்லை என்றால் எண்ணெயில் போடும் போது விட்டுப்போகும்)
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இவற்றை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்