தேவையான பொருட்கள்:
- சுறா மீன் – அரை கிலோ
- வெங்காயம் – 200 கிராம் (பொடியாக நறுக்கவும்)
- பூண்டு – 10 – 15 (பொடியாக நறுக்கவும்)
- பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கவும்)
- இஞ்சி – 1 துண்டு (பொடியாக நறுக்கவும்)
- கறிவேப்பிலை – 1 கொத்து (பொடியாக நறுக்கவும்)
- கொத்தமல்லி – 1 கையளவு (பொடியாக நறுக்கவும்)
- மிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- சோம்பு – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- சுறா மீனை மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து முள், தோல், எடுத்து விட்டு உதிரியாக்கவும்.அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து பொடியாக வெட்டிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு நன்றாக வதக்கவும்.
- பிசறிய சுறா மீனை போட்டு கிளறி கிளறி பச்சை வாசனை போன பிறகு இறக்கி பரிமாறவும்.