தேவையான பொருள்கள்:
- தூதுவளை இலை காம்புடன் – 1 கப்
- புளி – எலுமிச்சையளவு
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- பூண்டு – 4 பல்
- தாளிக்க – கடுகு, சீரகம், மிளகாய்
- சிவப்புஉப்பு – தேவையான அளவு
செய்முறை:
- காம்புடன் உள்ள தூதுவளை இலையை நன்கு கழுவி அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும்.
- பின் மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு முதலியவற்றை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சுட வைத்து அதில் கடுகு, சீரகம், மிளகாய் போட்டு தாளித்து பின் தட்டி வைத்துள்ள இலையைப் போட்டு ஒரே ஒரு வதக்கு வதக்கி, மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு தட்டி வைத்துள்ளதையும் போட்டு புளியையும் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
- நுரைத்து மேலே வரும் போது இறக்கவும்.
*நிறைய நேரம் கொதிக்க விடக்கூடாது.