தேவையான பொருட்கள் :
- வெண்டைக்காய் – 1/2 கிலோ
- புளி – நெல்லிக்காய் அளவு
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- உப்பு – தேவைக்கேற்ப
- பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- வெல்லம் – சுண்டைக்காய் அளவு
- எண்ணெய் – 4 தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் – 4
செய்முறை:
- வெண்டைக்காயைக் கழுவி தண்ணீரை வடித்துவிட்டு சுத்தமான துணியால் துடைத்து மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
- புளியைக் கெட்டியாகக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் கலந்து கொள்ளவும்.
- இருப்புச்சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், தாளித்து நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் புளிக்கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி வைக்கவும்.