தேவையான பொருட்கள்:
- ரின் பால் -1 ரின்
- தண்ணீர் -1,1/2 ரின்
- பால் மா -2 மே.கரண்டி
- சீனி -2 மே.கரண்டி
- கஸ்ராட்பவுடர் -2 தே.கரண்டி
- வனிலா -2 தே.கரண்டி
- இளஞ்சூடான நீர் -1/2 கப்
செய்முறை:
- ரின் பால், தண்ணீர், சீனி இவற்றைக் கரைக்கவும்.
- பால் மாவை இளஞ்சூடான நீரில் கரைத்து வடித்து பாலுடன் சேர்த்துச் சூடாக்கவும்.
- பின் கஸ்ராட் பவுடரைச் சிறிதளவு நீர் சேர்த்து கரைத்துப் பாலுடன் சேர்த்துக் கலக்கி இறக்கி ஆறவிடவும்.
- அத்துடன் வனிலாவையும் சேர்த்து அடிகருவியினால் (beater)அடித்துக் குளிரூட்டியில் வைக்கவும்.
- திரும்பவும் இரண்டு மூன்று தடவைகள் எடுத்து அடித்துக் குளிரூட்டவும்.
- நன்றாக ஐஸ் குளிர்ந்து இறுகி வந்தவுடன் ஐஸ் பரிமாறும் பாத்திரத்தில் இட்டு பரிமாறலாம்.